கதிராமங்கலம் விளைநிலத்தில் ஓ.என்.ஜி.சியின் எண்ணெய் குழாயில் கசிவு, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது காவல்துறை தடியடி - எஸ்.டி.பி.ஐ. கடும் கண்டனம்.
**********************
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தஞ்சை மாவட்டம் குத்தாலம் கதிராமங்கலத்தில் விளைநிலங்களுக்கு இடையே ஓ.என்.ஜி.சி., நிறுவனம் அமைத்துள்ள எண்ணெய்க் கிணறுகளின் பைப் லைன்களில் உடைப்பு ஏற்பட்டு எண்ணெய் கசிவு ஏற்பட்டது. கச்சா எண்ணெய் கொப்பளித்து விளைநிலங்களில் பரவிவருவதால் மக்கள் பெரும் அச்சமைடைந்துள்ளனர். இதனால் விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் தீப்பிடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டி இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் நேரில் வருகை தந்து ஓ.என்.ஜி.சி. அப்பகுதியிலிருந்து அகற்றப்படும் எனவும் மக்களின் உயிருக்கு பாதுக்காப்பு அளிக்கப்படும் என்று உறுதி அளிக்கும் வரை மக்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கைக்கு எவ்வித மதிப்பும் அளிக்காமல் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் போராட்டக்களத்தில் அதிரடியாக புகுந்து தடியடி நடத்தியுள்ளனர். பெண்கள் என்றும் பாராமல் கை கால் முறியும் அளவுக்கு காவல்துறை கொடூரமான தாக்குதலை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று பொதுமக்களும், விவசாயிகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில், காவிரி டெல்டாவையே மலடாக்கும் வகையில் காவல்துறை பலப்பிரயோகத்துடன் இதுபோன்ற திட்டங்கள் அங்கு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
கதிராமங்கலத்தில் காவல்துறை மேற்கொண்டுவரும் அடக்குமுறைகளுக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும். கதிராமங்கலத்திலிருந்து ஓ.என்.ஜி.சி வெளியேற வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் செவிமடுக்க வேண்டும். தமிழக அரசு மவுனம் காக்காமல் காவிரி டெல்டாவை பாதுகாக்க உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், கதிராமங்கலத்தில் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்