நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா்கள் பதவியேற்பு விழா கொக்கிரகுளம் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடைபெற்றது.
நெல்லை மாநகர மாவட்ட தலைவா் கே. சங்கரபாண்டியன், கிழக்கு மாவட்ட தலைவா் எஸ்கேஎம். சிவக்குமாா், மேற்கு மாவட்ட காங்கிரஸ்
கமிட்டி தலைவா் எஸ்.பழனி நாடாா், ஆகியோா் இன்று பொறுப்புகளை ஏற்றனா்.
விழாவில் முன்னாள் மத்திய அமைச்சா் தனுஷ்கோடி ஆதித்தன்,
நெல்லை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினா் ராமசுப்பு மற்றும் முக்கிய நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
முன்னதாக கட்சி அலுவலகத்தில் உள்ள அன்னை இந்திராகாந்தி சிலை, காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்தனா்
அதேபோல் நெல்லை ரயில் நிலையத்தில் உள்ள காமராஜா் சிலை. பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.
புதியதாக பொறுப்பேற்றுள்ள தலைவா்களை சந்திக்க மாவட்டம் முழுவதும் இருந்து காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் ஏராளமர்னோா் அலுவலகத்திற்கு
வந்திருந்தனா். புதிய தலைவா்களுக்கு சால்வை அணிவித்து மாியாதை செலுத்தினா். மேலும் நெல்லை மாவட்ட தகவல்களை அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். நண்பா்களுக்கு பகிருங்கள்-
subscribe: nellainewspost-
www.youtube.com/user/nellainewspost
http://nellainewspost.blogspot.in/
No comments:
Post a Comment