Friday, 16 June 2017

தமிழ்நாடு பேரூராட்சித்துறை கூட்டமைப்பு உண்ணாவிரதம்



பாளை ஜவஹர்திடலில் தமிழ்நாடு பேரூராட்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டம் சார்பில் மண்டல அளவிலான உண்ணாவிரதபோராட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமரேசன் தலைமை தாங்கினார். மாநில மாவட்ட நிர்வாகிகள் லெனின், ஜனார்தன பிரபு, ஜஸ்டின் திரவியம், சேகர், இராஜகணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர் சங்கம் மாநில தலைவர் எட்வர்டு ஜெபசீலன் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
     தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் மாநில தலைவர் உமா.செல்வராஜ், தூத்துக்குடி மாவட்ட தலைவர் தனசிங், தர்மர், பூவையா, நாராயணன் அல்லாபிச்சை, முருகன், கிரி, சம்சுதீன், வெள்ளைச்சாமி, சந்திரசேகர், இசக்கி முத்து,
    மகளிர் அணி செயலாளர் கலைச்செல்வி, தமிழ்மணி, இராஜேஸ்வரி, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாநில துணைத்தலைவர் குமாரவேல் உண்ணாவிரதபோராட்டத்தை முடித்து வைத்தார்.
    தமிழ்நாடு பேரூராட்சி செயல்அலுவலர் சங்கம் மாவட்ட பொருளார் கந்தசாமி நன்றி கூறினார்.
தகுதிவாய்ந்த கிராம ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்துதல்,காலிப்பணியிடங்களை பதவி உயர்வு மூலம் பூர்த்தி செய்தல் உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
more video. subscribe. nellai newspost
www.youtube.com/user/nellainewspost

No comments:

Post a Comment