Indian Bank - ஆலங்குளம் இந்தியன் வங்கி கிளை விழா
ஆலங்குளம்-
இந்தியன் வங்கி ஆலங்குளம் கிளை தென்காசி மெயின்ரோடு போஸ்ட் ஆபீஸ் எதிரே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய கட்டிடத்தில் வங்கி செயல்பாடு தொடக்க விழா, ஏடிஎம் மையம் தொடக்க விழா நடைபெற்றது.
நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திறந்து வைத்தார். விழாவில் இந்தியன் வங்கி பொதுமேலாளர் நாகராஜ், திருநெல்வேலி மண்டல மேலாளர் ராதாகிருஷ்ணன், கட்டிட உரிமையாளர் கணேசன், கதிர்வேல் கணேசன், மற்றும் டிபிவி மல்டிபிளக்ஸ் தியேட்டர் உரிமையாளர் வைகுண்டராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். செய்துங்கநல்லூர் கிளை மேலாளர் ஞானசுந்தரி வரவேற்றார்.
விழாவில் வாகன கடன், மகளிர் சுயஉதவிக்குழுவிற்கான கடன், சிறுதொழில் கடன், விவசாய கடன் உள்பட 115 பயனாளிகளுக்கு ரூபாய் 5.42 கோடி மதிப்பில் கடன் தொகைக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
ஆலங்குளம் கிளை மேலாளர் கனகசெல்வன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment