Wednesday, 14 June 2017

துணை வேந்தர் நியமனம் பற்றிய அவசர சட்டம் தேவையற்றது ! மூட்டா விளக்கம்

படவிளக்கம் நெல்லையில் செய்தியாளா்கள் சந்திப்பின்போது ....

நெல்லை.ஜூன். 14-
நெல்லை மூட்டா அலுவலகத்தில் செய்தியாளா்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் மூட்டா பொதுச்செயலாளா் நாகராஜ்,  தலைவா் சுப்பாராஜ், பொருளாளா் ராதாகிருஷ்ணன் ஆகியோா்  செய்தியாளா்களிடம் கூறியதாவது -
தமிழக அரசு  மே 27ம் தேதி துணை வேந்தர் நியமனம் குறித்து சில சட்ட திருத்தங்களை ஓர் அவசர சட்டமாக கொண்டு வந்துள்ளது . தமிழக  சட்ட மன்றம் கூடியுள்ள நிலையில் அவசர சட்டத்திற்கான தேவை என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது. இது சரியான நடைமுறை ஆகாது .
              துணை வேந்தர் நியமனங்களை சீர்படுத்துவதே இந்த அவசர சட்டத்தின் நோக்கமாக  சொல்லப்படுகிறது. ஆனால்  தற்போதுள்ள துணை வேந்தர் நியமனங்களில் உள்ள சீர்கேடுகளுக்கான  காரணிகள் எதுவும் நோக்கத்தில் குறிப்பிடப்படவில்லை. இன்று நிலவுகிற அரசியல் தலையீடு, ஊழல்
போன்ற சீர்கேடுகளை இந்த சட்ட திருத்தம் எந்தவிதத்திலும் நீக்க போவதில்லை. மாறாக இத்தகைய  சீர்கேடுகளை மேலும் வலுப்படுத்தும் .
 தெரிவுக்குழு உறுப்பினராக நியமிக்கப்படுபவர் தேர்ந்த கல்வியாளராக இருக்க வேண்டும்  என்று சொல்கின்ற சட்டத்திருத்தம் , சிறந்த கல்வியாளருக்கு உரிய வரையறையை பின்வருமாறு செய்கிறது .

1)மத்திய அல்லது மாநில அரசு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தராக பணியாற்றுபவர் அல்லது பணியாற்றியவர்
2)பத்து வருடங்களுக்கு குறையாமல் மாநில அல்லது மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக பணியாற்றிய
 சிறந்த கல்வியாளராக இருக்க வேண்டும் .
3)தேசிய பிரசித்திபெற்ற நிறுவனங்களில் இயக்குனர் அல்லது தலைவராக பணியாற்றுபவர் அல்லது பணியாற்றியவராக
 இருக்க வேண்டும் .
கல்லூரிகளில் பேராசியர் பணியிடம் என்பது இல்லை. எனவே இத்தகைய வரையறை, தெரிவுக்குழு உறுப்பினராக கல்லூரியில்
பணியாற்றிய அல்லது பணியாற்றுகின்ற "தேர்ந்த கல்வியாளர் '' ஒருவர் வருவதை தடை செய்கிறது. இதன் மூலம் அரசின் நேரடியான
அல்லது மறைமுகக்கட்டுப்பாட்டில் உள்ளவர்களே தெரிவுக்குழுவில் இடம் பெறமுடியும்  என்றாகிறது.
    துணை வேந்தர் நியமங்களில் ஓரளவேனும் அரசின் தலையீடுகளை எதிர்க்கக்கூடிய கல்லூரி ஆசிரிய சங்க பிரதிநிதிகள்
தெரிவிக்குழுவுக்குள் இடம் பெறாமல் செய்வதே இந்த சட்ட திருத்தத்தின் உள்நோக்கம் என்பது தெளிவாக தெரிகிறது.
தெரிவுக்குழு உறுப்பினருக்கு தகுதியை வரையறை  செய்த சட்ட திருத்தம், துணை வேந்தருக்கான கல்வி தகுதி மற்றும்  பணி அனுபவம் பற்றி வரையறை செய்யவில்லை என்பது  விந்தையானது.
 தமிழக அரசு, ஆளுனருடன் கலந்து பேசி, பின்னர் ஆணையாக அரசிதழில் வெளியிடப்படும் என்று கூறியுள்ளது .
           மேலும் தெரிவுக்குழு உறுப்பினர்கள் எவரும் பல்கலைக்கழகத்தோடும்  மற்றும் இணைவு கல்லூரிகளோடும்
 எவ்விதத்திலும் தொடர்ப்புடையவராக இருக்க கூடாது என்றும் அவசர சட்ட திருத்தம் வரையறை செய்கிறது. இத்தகைய பிற்போக்கான
 வரையறை அப்பல்கலைக்கழகத்தோடுதொடர்புடையவர்கள்  நடுநிலையாக செயல்பட மாட்டார்கள் என்ற நோக்கம் உடையதாக இருக்கிறது.
உண்மையில் பல்கலைக்கழகத்தோடு தொடர்புடையவர்களுக்கு அப்பல்கலைக்கழகத்தின் பலம்,பலவீனம், மற்றும் பல்கலைக்கழக தேவை பற்றி  அறிவும் ,பல்கலைக்கழகத்தின் மீது இயல்பான ஈடுபடும் இருக்க முடியும். அத்தகைய ஒருவர் தெரிவுக்குழுவில் இருப்பது துணை வேந்தர்
 தேர்வை செழுமைப்படுத்தும்.   துணை வேந்தர் நியமனங்களில் சமீப காலமாக அரசியல் தலையீடும் ,ஊழலும்  மலிந்து விட்டதாக அண்ணா பல்கலைக்கழக மேனாள் துணை வேந்தரும் சிறந்த கல்வியாளருமான  திரு. அனந்தகிருஷ்ணன்  விமர்சித்திருக்கிறார். தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள
 சட்ட திருத்தம் இந்த சீர்கேடுகளை ஒருபோதும் களையாது.
தெரிவுக்குழு சுதந்திரமாக இயங்க வேண்டும் என்றால் அக்குழுவில் அரசு / ஆளுநரின் பிரதிநிதி இருக்க கூடாது .
    இந்த திருத்தத்தை செய்வதற்கு பதிலாக , அரசின் கட்டுப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் இந்த அவசர சட்ட திருத்தம் கவலையளிக்கிறது .
எனவே இத்தகைய தேவையற்ற சட்ட திருத்தத்தை இன்னும் ஓரிருநாளில் கூடவிருக்கிற சட்டமன்ற கூட்டத்தொடரில் நிரந்தர சட்டமாக்க முன் மொழியாமல் , உயர்கல்வியோடு தொடர்புடைய  கல்லூரி மற்றும் பல்கலைக்கழக  ஆசிரியர்கள் , தேர்ந்த கல்வியாளர்களோடு கலந்து ஆலோசித்து திறமையான ,நேர்மையான மற்றும் ஆளுமை கொண்ட
துணை வேந்தரை நியமனம் செய்யும் வகையில் தேவையான சட்ட திருத்தத்தை கொண்டு வருமாறு வேண்டுகிறோம். மேலும்,
 கல்லூரிகளில் பேராசிரியர் பணியிடம் என்பது இல்லை என்பதால், துணை வேந்தருக்கான கல்வி தகுதி மற்றும் பணியனுபவம் பற்றி வரையறை  செய்யும் போது, கல்லூரியில் பணிபுரியும் இணை பேராசிரியர்களும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகிறோம். .இவ்வாறு அவா்கள்
தொிவித்தனா்.
மேலும் புதிய தகவல்களை அறிந்துகொள்ள nellainewspost  http://nellainewspost.blogspot.in/
www.youtube.com/user/nellainewspost

No comments:

Post a Comment