Sunday, 25 June 2017

இந்திய ஆசிரியர் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம்

*இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் நெல்லை மாவட்ட விரிவடைந்த பொதுக்குழு  கூட்டம் இன்று ஞாயிறு 25.06.2017  வீரமாணிக்க புரம் நவஜுவன் டிரஸ்டில் வைத்து மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது*.


*TNPTF மாவட்ட செயலாளரும் இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான செ.பால்ராஜ் தலைமை வகித்தார்*.

*STFI ன் மாநில பொறுப்பாளரும் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளருமான எட்வின் பிரகாஷ் வாழ்த்துரை வழங்கினார்*.

*8 சங்கங்களைச் சார்ந்த மாவட்ட பொறுப்பாளர்கள் கருத்துரை வழங்கினார்கள்*.

*5அம்ச கோரிக்கையை வழியுறுத்தி ஜுலை -10 முதல் ஜீலை -21 வரை ஆசிரியர் சந்திப்பு இயக்கம் நடத்துவது எனவும் ஜீலை -22 அன்று மாலை 4.30 மணிக்கு மாவட்ட தலைநகரத்தில் ஆர்பாட்டம் நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது*.

*TNPTF. மாநில செயற்குழு உறுப்பினர் மு.முத்தானந்தம் தேவதாஸ் நன்றி கூறினார்.*


               

No comments:

Post a Comment