Wednesday, 21 June 2017

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சர்வேதேச யோகா தினம்




மனோன்மணியம் சுந்தரனார் 
பல்கலைக்கழகத்தில்   சர்வேதேச
 யோகா தினம் கொண்டாடப்பட்டது. 
     சா்வதேச யோகாதினத்தையொட்டி
 நெல்லை மனோன்மணியம்
 சுந்தரனாா்  பல்கலைக்கழக
வளாகத்தில்  உள்ள விளையாட்டு 
மைதானத்தில் யோகா
 செய்முறை பயிற்சி நடைபெற்றது. 
இந் நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக
  துணைவேந்தர்  பாஸ்கர்  தலைமை
 தாங்கி சிறப்புரையாற்றினாா்.
     அப்போது அவா் கூறுகையில்
 யோகா பயிற்சி மேற்கொள்ளும் 
போது  நமது  உடல்நலம், மனநலம் 
மேலும்  நோய் நொடியில்லா 
ஆரோக்கியமான  வாழ்க்கை வாழ 
முக்கிய பங்கு வகிக்கிறது
 என்று கூறினாா். 
      சிறப்பு விருந்தினராக உலக
 சமுதாய  சேவா சங்கத்தின்
 திருநெல்வேலி  மண்டல
 துணைத்தலைவர் சந்திரசேகரன் 
கலந்து கொண்டு யோகாவின் 
வரலாறுகள், யோகாவின் நோய்
 தீர்க்கும்  பயன்கள் பற்றியும்
 எடுத்துச்  சொல்லி அதற்கு தற்போது 
கிடைத்த  அங்கீகாரத்தைப் பற்றியும் 
எடுத்துரைத்தார். 
 பல்கலைக்கழகப் பதிவாளர் 
ஜான்.டி.பிரிட்டோ
  சிறப்புரையாற்றினாா்
 மேலும் யோகா செய்முறை
 பயிற்சியில்
 கலந்து கொண்டார்.  பல்கலைக்கழக 
இளைஞர் நலத்துறை இயக்குநர்  
.வெள்ளியப்பன்  வரவேற்றாா். 
       ஆட்சிக்குழு உறுப்பினர்கள், 
பல்கலைக்கழகத்தின் பேராசியர்கள்,
 பல்கலைக்கழக அலுவலர்கள், 
பல்கலைக்கழக மாணவர்கள்,
 DDCE B.Ed  மாணவர்கள், ரோஸ் மேரி, 
ராணி அண்ணா, சராஹ் டக்கர், 
தூய சேவியர்ஸ்  மற்றும் ம.தி.தா 
இந்து கல்லூரிகளின்  மாணவ 
மாணவியர்கள் உட்பட 
300க்கும் மேற்ப்பட்ட பலர் 
கலந்துகொண்டார்கள். 
கல்வியல் துறைத்தலைவர் வில்லியம்
 தர்மராஜா, நாட்டு நலப்பணித்திட்ட
 இயக்குநர் .ராஜலிங்கம், .ரமேஷ் ஆகியோா்   
இந்நிகழ்ச்சியிணை ஒருங்கினைத்தனா். 
விளையாட்டு இயக்குநர் மற்றும்
உடற்கல்வியியல் விளையாட்டுத்
துறைத் தலைவர்  சேது  நன்றி கூறினார். 
subscribe: nellai newspost 
www.youtube.com/user/tamilnewspost
http://nellainewspost.blogspot.in/



No comments:

Post a Comment