நெல்லை அதிமுக முன்னாள் மேயர் புவனேஸ்வரி , முன்னாள் ஆணையர் உள்பட 9 பேர் மீது நெல்லை முதன்மை அமர்வு நீதிமன்றம் வழக்கு பதிவு செய்ய உத்தரவு, அதிமுக நடத்திய மகளிர் தினவிழாவுக்கு மாநகராட்சி நிதியை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு
கடந்த 08.03.15 அன்று நெல்லை மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்ட மகளிர் தின விழாவில் நிதி மோசடி செய்ததாக நெல்லையை சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா என்பவர் தொடர்ந்த வழக்கில் முன்னாள் மேயர் புவனேஸ்வரி, முன்னாள் மாநகராட்சி ஆணையர் லெஷ்மி, மாநகராட்சி நல அலுவலர் ( பொறுப்பு )கருப்பசாமி, உதவியாளர் காசிவிஸ்வநாதன், இளநிலை உதவியாளர் இளமுக எழிலரசி, ( சாந்தி, சுந்தரி, கலாவதி )சமூக அமைப்பாளர்கள், உதவி ஆணையர் கணக்கு கீதா ஆகிய 9 பேர் மீது வழக்கு பதிவு செய்ய மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ராமதாஸ் மாநகர குற்றப்பிரிவு காவல் ஆய்வாளருக்கு உத்தரவு ..
மேலும் புதிய தகவல்களை அறிந்துகொள்ள nellainewspost http://nellainewspost.blogspot.in/www.youtube.com/user/nellainewspost

No comments:
Post a Comment