மஸ்ஜித்துல் ஹுதா சார்பாக பெருநாள் சிறப்பு தொழுகை
மேலப்பாளையம் விரிவாக்க பகுதியான கரீம் நகர் மஸ்ஜிதுல் ஹுதா ஜமாத் சார்பாக ஈத் (ரமலான்) பெருநாள் திடல் தொழுகை கரீம் நகர் திடலில் நடைபெற்றது
சிறப்பு தொழுகையை இர்பானூல் ஹீதா மகளிர் அரபி கல்லூரி பேராசிரியர் மவ்லவி மீரான் முகைதீன் அன்வாரி தொழுகை நடத்தினார்
பெருநாள் சிறப்பு குத்பா பேருரை மஸ்ஜிதுல் ஹுதா தலைவர் மவ்லவி K.S சாகுல் ஹமீது உஸ்மானி அவர்கள் நிகழ்த்தினார்கள்
அவர் தனது உரையில் அன்பும் அமைதியும் உலகில் தழைக்க இன்றைய தினம் பிராத்திக்கப்படுகிறது
இந்த பெருநாளின் சிறப்பம்சமே ஏழ்மையும் வறுமையும் மனித குலத்தில் இருந்தே விரட்டபட வேண்டும் என்பதே முஸ்லிம்களின் கடமை
பெருநாள் தொழுகை திடலுக்கு வரும்முன் கஷ்டபடுகின்ற மக்களுக்கு தானியங்கள், உதவிகள் (பித்ரா) வழங்கிட வேண்டும் என்றே இஸ்லாம் வலியுறுத்துகிறது
அதையே முஸ்லிம்களும் பின்பற்றுகின்றனர்
என்றார்
சிறப்பு தொழுகையில் பள்ளிவாசல் கமிட்டி உறுப்பினர் கள்,ஜாபர் அலி உஸ்மானி, ஜவஹர்,பிஸ்மி நவ்ஷாத்,மற்றும் SDPI கட்சியின் மாநில துணைத்தலைவர் நெல்லை முபாரக் ,மாவட்ட பொதுச்செயலாளர் s.s அப்துல் கரீம்,முகம்மது லெப்பை,கல்வத்,பஷீர்,இத்ரீஸ் பாதுஷா,இசாக்,சேக்.,மீரான்,சுல்தான் பாதுஷா,கரீம் நகர் ,தாய் நகர்,முகம்மது நகர் ஜமாத்தார்கள் ,பெண்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்


No comments:
Post a Comment