| நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு தமிழ்நாடு பேரூராட்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்த படம் |
| ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஊழியா்கள் |
நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு தமிழ்நாடு பேரூராட்சி
அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமரேசன் தலைமை தாங்கினார்.
மாவட்ட பொருளாளர் கந்தசாமி வரவேற்றார். பொறியாளர் சங்கம்
மாநில தலைவர் ஜனார்தன பிரபு, ஊழியர் சங்கம் மாவட்ட செயலாளர்
அல்லாபிச்சை, பணியாளர் சங்கம் மாவட்ட செயலாளர் முருகன் ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.
செயல் அலுவலர் சங்கம் மாவட்ட தலைவர் முத்துக்குமார் துவக்க
உரையாற்றினார். பணியாளர் சங்கம் தூத்துக்குடி மாவட்ட தலைவர்
வேலுச்சாமி, சிறப்புரையாற்றினார். பணியாளர் சங்கம் மாநில செயலாளர்
தர்மர் சிறப்புரையாற்றினார். தொழில்நுட்ப பணியாளர் சங்கம் நெல்லை
மாவட்ட தலைவர் சம்சுகனி, துப்புரவு மேற்பார்;வையாளர் சிவகரி
மாடசாமி, கணினி இயக்குபவர் சங்கம் மாவட்ட செயலாளர்
முத்துகிருஷ்ணன் துப்புரவு பணியாளர் சங்கம் மாவட்ட தலைவர்
சந்திரசேகர் வாழ்த்துரை வழங்கினர். பேரூராட்சி பணியாளர் சங்கம்
மாநில பொருளாளர் நாமதுரை நிறைவுரையாற்றினார்.
செயல் அலுவலர் சங்கம் மாவட்ட செயலாளர் பாபு நன்றி கூறினார்.
தகுதி வாய்ந்த கிராம ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம்
உயர்த்துதல், அனைத்து நிலைகளிலும் காலிப்பணியிடங்களை
பதவி உயர்வு மூலம் நிரப்புதல் உள்பட 20 அம்ச கோரிக்கைகளை
வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
மேலும் புதிய தகவல்களை அறிந்து கொள்ள
நெல்லை நியூஸ் போஸ்ட் யூ டியூப் சேனலி்ல்
இணைந்து பயன் பெறுங்கள்- நன்றி
www.youtube.com/user/
nellainewspost
nellainewspost
இது நம்ம சேனல்
No comments:
Post a Comment