நெல்லையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சண்முக சுந்தரம் தலைமை தாங்கினார். துணை தலைவர் ராஜசேகர் வரவேற்றார். மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், எல்ஐசி கோட்ட பொதுச்செயலாளர் முத்துக்குமாரசாமி உரையாற்றினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாநில துணை தலைவர் குமாரவேல் சிறப்புரையாற்றினார். சுமதி நிறைவுரையாற்றினார். மாவட்ட இணை செயலாளர் பழனி நன்றி கூறினார்.
ஊராட்சி செயலாளர்களுக்கு சிறப்பு நிலை ;தேர்வு நிலை மற்றும் கூடுதல் பொறுப்பு படி பெற்றிட, ஊராட்சி செயலாளர்களுக்கு இளநிலை உதவியாளருக்கு இணையான ஊதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

No comments:
Post a Comment