Monday, 19 June 2017

களக்காட்டில் புதிய டாஸ்மாக் கடைக்கு விடுதலை சிறுத்தைகள் எதிர்ப்பு

நெல்லை, ஜூன். 19
நெல்லை மாவட்டம் களக்காடு ஜெ.ஜெ.நகரில் புதிய டாஸ்மாக் அமைப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
   நெல்லை தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஏராளமானோர் மாவட்ட ஆட்சியர் அலுவலத்திற்கு திரண்டு வந்தனர். மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம்  கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில்இ  களக்காடு ஜெ.ஜெ.நகர் பகுதியில் புதிய டாஸ்மாக் கடை அமைப்பதை ஆட்சியர் தடுத்து நிறுத்த வேண்டும். இந்த பகுதியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தை சுற்றி ஊச்சிகுளம்இ சவலைக்காரன் கிராமத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். மருத்துவமனை மின்வாரிய அலுவலகம் அமைந்துள்ளது. மாணவ மாணவிகள் இந்த வழியாக பள்ளி செல்வதால் புதியதாக அமைய உள்ள டாஸ்மாக் கடையை தடுத்து நிறுத்த  மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருந்தது.
மேலும் புதிய செய்திகளை விரைவாக அறிந்து கொள்ள-

nellainewspost
www.youtube.com/user/nellainewspost



No comments:

Post a Comment