Friday, 23 June 2017

வடகரையில் திமுக சார்பில் மதியஉணவு


வடகரை  அன்பு  இல்லத்தில்  தலைவர்  கலைஞர்  அவர்களின்  பிறந்த நாளை  முன்னிட்டு  முதியோர்  மற்றும்  மனவளர்ச்சி  குன்றியோருக்கு  மதிய உணவுகள்  வழங்கும்   நிகழ்ச்சி  நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு  மாநில மாணவரணி துணை செயலாளர் ஷெரீப்  தலைமை தாங்கினார்.   மாவட்ட  மாணவரணி  துணை அமைப்பாளர்  வக்கீல்  ராஜா,ஜெகதீஸ்  செங்கோட்டை  மாணவரணி  அமைப்பாளர்  இம்ரான்  முன்னிலை  வகித்தனர்.  பண்பொழி  முன்னாள்  தலைவர் மாவட்ட பிரதிநிதி  மங்களவிநாயகம்  வரவேற்றார். வடகரை முன்னாள்  பேரூராட்சித் தலைவர்  அஜிஸ்  முத்துமீரான்  தொகுத்து  வழங்கினார். மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன்  முதியோர்களுக்கு  அறுசுவை  உணவுகள்  வழங்கினார்.  நிகழ்ச்சியில்  முன்னாள்  சட்டமன்ற  உறுப்பினர்  ரசாக்  மாவட்ட  அவைத்தலைவர்  முத்துப்பாண்டி   ஒன்றிய செயலாளர்கள்  செல்லத்துரை  ஆ.ரவிசங்கர்  வே.ஜெயபாலன் மாவட்ட  விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர்  கோமதிநாயகம்  மாவட்ட  தொண்டர் அணி அமைப்பாளர்  இசக்கிப்பாண்டியன்  அணி துணை அமைப்பாளர்கள் வளன்அரசு  யோவான்  கிட்டுப்பாண்டியன்  கோ.சாமித்துரை  சண்முகநாதன் அந்தோணி, அற்புதராஜ்    ராமராஜன்  ஒன்றிய இளைஞரணி அழகுசுந்தரம்    தொண்டர் அணி  பரமசிவம்   கீழப்பாவூர்  பேரூர் கழக செயலாளர்  ஜெகதீசன் குற்றாலம்  பேரூர் கழக செயலாளர்  மந்திரம்  புதூர்  மதியழகன்  அச்சன்புதூர்  வெள்ளத்துரை  மாவட்ட பிரதிநிதி  முதலியான்கான் சாகுல்ஹமீது ரெசவுமைதீன் அபுல்ஹசன் இளைஞரணி ஐயப்பன் இசக்கித்துரை  முகம்மது இஸ்மாயில்  ராஜேந்திரன்  மீரான்உசேன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்  முடிவில் மாவட்ட  இலக்கிய  அணி பொருளாளர்  கனல்காஜா நன்றி கூறினார்.

No comments:

Post a Comment