Thursday, 22 June 2017

நெல்லையில் கட்டுமான பொறியாளா் கூட்டமைப்பு கோாிக்கை ஆா்ப்பாட்டம்



       பாளை ஜவஹர்திடலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டிட பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க தலைவர்கள் செய்யது முகமது புகாரி;. தில்லை நடராஜன் ஆகியோர்  தலைமை தாங்கினர்.
 சொக்கநாதன், இசக்கியப்பன், பஷீர் அகமது, முத்துக்குமார், மன்மதன், முத்துமாரியப்பன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
       நீர் வளஆதாரத்தை பாதுகாத்திட ஆற்று மணலுக்கு பதிலாக செயற்கை மணல் மட்டுமே பயன்படுத்திட அரசு ஆணையிட்டு மாற்றுமணல் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும். கட்டுமான பொருட்களை அத்தியாவசிய விலைப்பட்டியலில் கொண்டு வந்து அரசு விலை நிர்ணயம் செய்யவேண்டும் என்பது உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

No comments:

Post a Comment