Sunday, 25 June 2017

ரம்ஜான் பண்டிகையையொட்டி TMJK அாிசி உணவு பொருட்கள வழங்கினா்

ரம்ஜான் பண்டிகைக்காக தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சாா்பில் பித்ரா  வழங்கும் நிகழ்ச்சி 

ரம்ஜான் பண்டிகைக்காக தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சாா்பில் பித்ரா  வழங்கும் நிகழ்ச்சி யில் பங்கேற்ற கட்சியினா். 

ரம்ஜான் பண்டிகையையொட்டி தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் அரிசி மற்றும் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி பாளையங்கோட்டையில் நடைபெற்றது.
    பாளை பகுதி தலைவர் ரஹ்மான் தலைமை தாங்கினார். பகுதி பொருளாளர் சேக்முகமது, இளைஞரணி ரஹ்மத்துல்லா, மாநகர செயலாளர் சேக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் அப்துல் ஜப்பார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 100க்கு மேற்பட்ட ஏழைக்குடும்பங்களுக்கு அரிசி மற்றும் உணவு பொருட்களை வழங்கினார்.
     மாவட்ட பொருளாளர் சாந்தி ஜாபர், மாவட்ட இளைஞரணி செயலாளர் லெனின், மாவட்ட செய்தி தொடர்பாளார் ஜமால், மாவட்ட மீனவரணி தமாஸ், மேலப்பாளையம் பகுதி நிர்வாகிகள் சரீப் அலி, நயினார், ஜின்னா உள்பட பலர் கலந்து கொண்டனர். பாளை பகுதி செயலாளர் ரபீக் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment