| ஆலங்குளத்தில் காங்கிரஸ் கட்சி சாா்பில் நடைபெற்ற விழாவின் போது எடுத்த புகைப்படம் |
ஆலங்குளம் வட்டார நகர காங்கிரஸ் மற்றும் கிழக்கு் மாவட்ட நகர
ஓபிசி பிாிவு சாா்பில் கட்சியின் 134 வது ஆண்டு விழா சிறப்பாக
கொண்டாடப்பட்டது. ஆலங்குளம் நந்தவனம் கிணறு அருகே வடசென்னை காங்கிரஸ் கமிட்டி தலைவா் எம்.எஸ் திரவியம் கட்சி கொடியை
ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினாா். ஓபிசி பிாிவு கிழக்கு மாவட்ட தலைவா் வழக்கறிஞா் ராஜா தலைமை தாங்கினாா.
நகர தலைவர் தங்கசெல்வம் முன்னிலை வகித்தார்,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு பால்ராஜ் வரவேற்று பேசினார்.
மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுசெயலாளர் கருப்பசித்தன்,ஒபிசி
பிரிவு நகர தலைவர் ஆறுமுகராஜ்,வட்டார தலைவர் அலெக்ஸ்சாண்டர்,நகர செயலாளர் லிவிங்க்ஸ்டன், பிரதாப், பொது செயலாளர் அருமைநாயகம்,ஒபிசி பிரிவு தொகுதி தலைவர் வெங்கடகிருஷ்ணன், லெனின்,ராகுல் வேலாயுதம், இளைஞர் காங்கிரஸ் சிவா மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்துகொண்டார்கள்.காமராஜா் சிலைக்கு மாலை
அணிவித்து மாியாதை செய்தனா்.



































