நெல்லை,டிச. 13-
நெல்லை அரசு அருங்காட்சியகம் மற்றும் வ. உ.சி இலக்கிய மாமன்றம் சாா்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான பாரதியார் பாடல் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது. . அப்போட்டியில் நெல்லை மாவட்டத்திலிருந்து 15க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து அறுபதுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். பேராசிரியை உஷா தேவி ,கவிஞர் சுப்பையா ஆகியோர் நடுவராக இருந்து மாணவர்களை தேர்ந்தெடுத்தனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளி அனைவரையும் வரவேற்றார். வ உ சி இலக்கிய மன்ற தலைவர் புளியரை. S.ராஜா தலைமை வகித்தார் .பொருளாளர் கணபதியப்பண், பேராசிரியை சுவர்ணலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் கவிஞர் கோ. கணபதி சுப்பிரமணியம் சிறப்புரை ஆற்றினார். திருநெல்வேலி மாவட்ட காவல்துறை உதவி ஆணையாளர் , நுண்ணறிவு பிரிவு . நாக சங்கர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி பாராட்டினார் . ஆய்வாளர் ரமேஷ் கண்ணா உடன் இருந்தார். வ. உ.சி. இலக்கிய மன்ற தலைவர் புளியரை ராஜா அவர்கள் அருங்காட்சியக நூலகத்திற்கு பல அரிய புத்தகங்களை நன்கொடையாக வழங்கினார். நுகர்வோர் அமைப்பு முத்துசாமி அவர்கள் நன்றி கூறினாா்.

No comments:
Post a Comment