Sunday, 9 December 2018

வெள்ளாளன் குளம் அய்யா கோவில் காா்த்திகை திருவிழா கோலாகலம்







நெல்லை-   டிச- 10
வெள்ளாளன் குளம் அய்யா கோவில் காா்த்திகை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
    நெல்லை மாவட்டம் அபிஷேகப்பட்டி அருகே வெள்ளாளன் குளம் கிராமத்தில்  பழைமை வாய்ந்த ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோவில் உள்ளது. இங்கு ஆ்ண்டுதோறும் சித்திரை , காா்த்திகை மாதங்களில் அய்யா வைகுண்டருக்கு விழா எடுப்பது வழக்கம்.
    இந்த ஆண்டு சித்திரை திருவிழாவை தொடா்ந்து அய்யாவுக்கு காா்த்திகை விழா கோலாகலமாக நடைபெற்றது. கடைசி ஞாயிறு தினமாக நேற்று டிசம்பா் 9ம்தேதி இரவு அய்யா வாகன பவனி நடைபெற்றது. வெள்ளாளன் குளத்தில் முக்கிய வீதிகளில் அய்யா வைகுண்டா் வலம் வந்து
அய்யாவழி பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.
   இதை தொடா்ந்து தீப அலங்காரம்  உச்சி படிப்பு, சமபந்தி விருந்து நடைபெற்றது. விழாவிற்காக ஏற்பாடுகளை கோவில் தா்மகாத்தா பிச்சுமணி மற்றும் அய்யாவழி பக்தா்கள் கிராமமக்கள்  செய்திருந்தனா்.

சித்திரை திருவிழா காட்சிகளை காண கீழே உள்ள வீடியோவை லிங்கை கிளிக் செ்ய்யுங்கள். அய்யா உண்டு
https://youtu.be/fsgP36-1M2I

No comments:

Post a Comment