Sunday, 9 December 2018

ஆலங்குளத்தில் சோனியா காந்தி பிறந்தநாள் விழா


ஆலங்குளத்தில் சோனியா காந்தி பிறந்தநாள் விழா கொண்டாட்டம் 

ஆலங்குளம் டிச 10: 
           ஆலங்குளத்தில் காமராஜர் சிலை முன்பு சோனியா காந்தி பிறந்த நாள் விழா  கொண்டாடப்பட்டது 
             ஆலங்குளம் காமராஜர் சிலை முன்பு ஆலங்குளம் நகர தலைவர் தங்கச்செல்வம் தலைமையில் விழா நடைபெற்றது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.அதனை தொடர்ந்து முன்னாள் எம்பி ராமசுப்பு சிறப்பு விருந்தினராக பங்கேற்று  ஸ்ரீ நத்தம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைப்பெற்றது.பின்பு பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. விழாவில் வட்டார தலைவர் அலெக்சாண்டர், கலை இலக்கிய மாநில துணை தலைவர் ஆலடி சங்கரையர மாவட்ட துணை தலைவர் பொன்னுசாமி, நகர பொது செயலாளர் அருமைநாயகம், நகர துணை பொது செயளாலர் யோகம் ராஜா, நகர துணை தலைவர் M. ஜோசப்பு மற்றும் பிரதாப், பிரகாஷ் , குமரன், காசி பெருமாள், மகாராஜா, பாலகிருஷ்ணன், தாமஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.   

No comments:

Post a Comment