நெல்லை. டிச. 6
கஜா புயல்" தாக்கத்தினால், வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் காவேரி டெல்டா" மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையத்தில் உள்ள,"முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி" மற்றும் "கோல்டன் ஜுபிளி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி" சார்பில், சுமார் 2 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, "நிவாரணப் பொருட்கள், 4 வாகனங்களில், அனுப்பி வைக்கப்பட்டன.
நெல்லை மாநகர காவல், துணை ஆணையர். கு. சுகுணா சிங் மாணவ-மாணவிகள்,ஆசிரியா்கள் மற்றும் கல்விக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில், "பச்சைக்கொடி" அசைத்து, வாகனங்களை வழி அனுப்பி, வைத்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில்,"முஸ்லிம் கல்விக் கமிட்டி" துணைத்தலைவர். K.A.M.முகம்மது அலி அக்பர், பொருளாளர். . T.S.M.O.அப்துல் மஜீத்,உறுப்பினர்கள்."மூத்த பத்திரிக்கையாளர்",.TSMO.ஹஸன், L.K.M.A.முகம்மது சலீம், .K.A.M.பக்கர்,அல்ஹாஜ். S.A.S.முகம்மது அலி ஜின்னா, முஸ்லிம் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர். . K.M.K.சேக் முகம்மது,உதவித் தலைமை ஆசிரியர்கள், . M.A.அப்துல் சமது, K. M.கலந்தர் அப்துல் காதர், S.ஜமால் முகைதீன் மற்றும் கோல்டன் ஜுபிளி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர். .ராஜ. ஜெஸிந்தா மற்றும் துணை முதல்வர். .ஸாஜிதா பாரூக் ஆகியோர், கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment