Friday, 7 December 2018

ம. தி,தா பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா

நெல்லை சந்திப்பில் ம தி தா பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா
விஜிலா சத்தியானந்த் எம்.பி பங்கேற்பு
நெல்லை டிச 8    நெல்லை சந்திப்பு   மதிதா இந்துக்கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடந்தது. இவ்விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் வேல்முருகன்  வரவேற்றார். பள்ளிக் கல்வி சங்க  தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக விஜிலா சத்தியானந்த் எம்.பி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, +1  மாணவர்களுக்கு 189 பேர்க்கும், மாணவிகள் 59 பேர்க்கும் +2 மாணவர்கள் 161 பேர்க்கும் மாணவிகள் 42 பேர்க்கும் ஆக மொத்தம்  451 பேர் க்கு  விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாநகர  அவைத் தலைவர் பரணி சங்கரலிங்கம் , தச்சை மண்டல முன்னாள் தலைவர் தச்சைமாதவன், ஹயாத், கிருஷ்ணமூர்த்தி , மின்வாரிய தொழிற்சங்க   நிர்வாகி கருப்பசாமி, மோகன் , படப்பை சுந்தரம், திருத்து சின்னத்துரை , வக்கீல் ஜெனி,  சி.பா, முருகன்.
தச்சை மணி, பள்ளிக் கல்வி சங்க பொருளாளர் சிதம்பரம், பள்ளிக் கல்வி சங்க ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் சுரேஷ், ஏ.எல்.எஸ் சண்முகம், ஆகியோர் கலந்து கொண்டனர். விழா முடிவில் பள்ளித் முதுநிலை ஆசிரியர்   ராஜேந்திரன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment