Tuesday, 4 December 2018

ஆலங்குளத்தில் தொழில் தடை நீக்க தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை

ஆலங்குளம் பகுதியில் தொழிற்சாலைகள்,வர்த்தக நிறுவனங்கள் தொடங்குவதற்கு உள்ள தடைகளை நீக்க கோாிக்கை மனு வழங்கியபோது எடுத்த படம். 
 ஆலங்குளம். டிச. 4

       தமிழ்நாடு வணிகர் சங்ககளின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ எம் விக்கிரமராஜா, மாநில துணைத்தலைவர் ஆலங்குளம்  டி பி வி மல்டிப்ளெக்ஸ் திரையரங்கம் உரிமையாளர் வைகுண்டராஜா, மாநில இணைசெயலாளர் நட்ராஜ், மாவட்ட செய்தி தொடர்பாளர் பால்ராஜ், நெல்லை மாவட்ட தொழில்மையம் மேலாளர் முருகன் ஆகியோர் சென்னையில் தொழில் துறை மற்றும் வர்த்தகதுறை முதன்மை செயலாளர்  டாக்டர் ராஜேந்திரகுமார் ஐ.ஏ.எஸ் இடம் கோாிக்கை மனு வழங்கினா்.
   அந்த மனுவில்........
       திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் தொழிற்சாலைகள்,வர்த்தக நிறுவனங்கள் தொடங்குவதற்கு உள்ள தடைகளை நீக்க வேண்டும். 
    ஆலங்குளம் மற்றும் ஆலங்குளம் தாலுகாவை சுற்றியுள்ள ஊர்களில் அரிசி ஆலைகள் எண்ணெய் ஆலைகள் டால் ஆலைகள் என பல ஆலைகள் இருந்து வருகின்றன தற்போது புதியதாக தொழிற்சாலைகளை மேம்படுத்தி நவீனமயமாக முற்படும்போது கீழ்கண்ட பல தடைகள் ஏற்படுகின்றன
     புதிய தொழில்சாலைகள் தொடங்குவதற்கு நகர ஊரமைப்பில் கட்டிட வரைபட அனுமதி கோரினால் ஆலங்குளம் மலை கிராமம் ஆதலால் தடையின்மை சான்று பெற சென்னையில்தான் அனுமதி பெற வேண்டும் என்கிறார்கள்.
      ஆலங்குளத்தை சுற்றிலும் 20 கிலோமீட்டர் சுற்றளவிற்கு மலைப்பிரதேசம் கிடையாது. 22.09.2016 தேதி கடிதப்படி ஆலங்குளம் பகுதி நகரமாகி உள்ளது
இதற்கான சான்றிதழ்களை இத்துடன் இணைத்துள்ளோம்.
   ஆலங்குளம் மலை பகுதி இல்லை எனவும் நகர ஊரமைப்பு அலுவலக அனுமதி வாங்குவதருக்கு விலக்கு அளித்து ஆண்டாண்டு காலமாக செய்வதுபோல் பஞ்சாயத்துகளில் ஒப்புதல் அளித்திட வேண்டுகிறோம் தனித்தனி கதவு எண் கொண்டு  தனித்தனி தொழில் செய்பவர்களையும் எச்..டி சர்வீஸ் வேண்டும் என புதிய நிபந்தனைகள் விதிக்கபடுகிறது.
  ஆலங்குளம் தற்போது நகர புறமாகவும் தாலுகாவாகவும் உள்ளதால் மலை பாதுகாப்பு மற்றும் மண் பாதுகாப்பு இனங்கள் எதுவும் கிடையாது என்பதையும் தெரிவித்து கொள்கிறோம். தனித்தனி கட்டிடங்களில் தனித்தனி தொழில் செய்ய எல்.டி சர்வீஸ் தந்திடவேண்டுகிறோம்.
     தற்போது 150 எச்..பி வரையில் உள்ள மின் இணைப்புகளுக்கு எல்.டி சர்வீஸ் கொடுக்கபடுகிறது ஆனால் அந்த திறன் தொழில் சாலைகளுக்கு மிகவும் குறைவாக உள்ளதால் 250 எச்.பி முதல் 300 எச்..பி வரையில் எல்.டி சர்வீஸ் இணைப்பு தந்திட ஆவணை செய்ய வேண்டும்
    ஆலங்குளம் கிராமத்தை மலை கிராம பகுதியில் இருந்து விலக்கு அளித்து மாசுக்கட்டுப்பாடு வாரியம் அனுமதி எளிதாக கிடைக்க அனுமதி வழங்கவேண்டும்.
      புதிதாக தொழில் தொடங்குவோர்  மகிழ்ச்சியாக தொழில்கள் செய்து பல ஆயிரகணக்கானோா்ர் குடும்பங்கள் வாழ்த்தவதருக்கு நன்றாக இருக்கும் என்று கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.  

No comments:

Post a Comment