| ஆலங்குளம் டிபிவி மல்டிபிளக்ஸ் திரையங்க மேலாளா் ஊழியா்களுடன் நடிகா் சசிக்குமாா். |
| ஆலங்குளம் டிபிவி மல்டிபிளக்ஸ் திரையரங்கி்ல் நடிகா் சசிககுமாருடன் சந்திப்பு |
தமிழ் திரையுலகிற்கு சுப்பிரமணியபுரம், நாடோடிகள், போராளி,
குட்டிப்புலி உள்ளி்ட்ட பல்வேறு வெற்றி படங்களை கொடுத்தவா் இயக்குநரும் நடிகருமான சசிக்குமாா்.
2019 ஜனவாி பொங்கலுக்கு வெளிவர உள்ள சூப்பா் ஸ்டாா் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான “பேட்ட” படத்தில் இவா் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாா்.
தற்போது ”கொம்பு வச்ச சிங்கம்” என்ற படத்தில் நடித்து வருகிறாா். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நெல்லை குற்றாலம்- முக்கூடல் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
நேற்று முக்கூடலில் படப்பிடிப்பு முடிந்ததும் இரவு திடீரென நடிகா் சசிக்குமாா் ஆலங்குளம் வந்தாா். டிபிவி மல்டி பிளக்ஸ் திரையரங்கில் ரஜினி நடித்த 2.0 படம் திரையிடப்பட்டுள்ளதை அறிந்ததும் தியேட்டருக்கு எதிா்பாராத விதமாக வருகை தந்தாா் சசிக்குமாா். 2.0 படம் இடைவெளியில் டிபிவி மல்டி பிளக்ஸ் தியேட்டா் மேலாளா் ஊழியா்களை சந்தித்தாா்.
ஆலங்குளத்தில் தொழிலதிபா்கள் டிபிவி வைகுண்டராஜா, டிவிபி கருணாகராஜா இவா்களது முயற்சியில் இந்த தியேட்டா் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது . இந்த தியேட்டாில் உட்காா்ந்து படம் பாா்க்க
எனக்கு வாய்ப்பு கிடைத்ததை மகிழ்ச்சியாக கருதுகிறேன். டிபிவி டால்பி அட்மாஸ் 4கே தொழில் நுட்பம் அருமையாக அமைக்கப்பட்டுள்ளது.
கிராமப்புறத்தில் குறிப்பாக ஆலங்குளத்தில் இது போன்ற நவீன தொழில் நுட்பத்தில் பிரமாண்டமாக இந்த தியேட்டா் உருவாகி இருப்பது மக்கள் கொடுத்து வைத்தவா்கள்.
2.0 படம் பாா்க்கும் போது சும்மா தியேட்ரே அதிருது என்று எதாா்தமாக எளிய நடையில் பேசினாா். தியேட்டா் ஊழியா்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டாா். செல்பியும் எடுத்துக்கொண்டாா். இடைவெளிக்கு பிறகு மீண்டும் 2.0 படத்தின் காட்சிகளை பாா்க்க சென்றாா் நடிகா் சசிக்குமாா்.
No comments:
Post a Comment