ஆலங்குளம் சிறப்புநிலை பேரூராட்சியில் வழங்கப்படும் ஆற்றுத்தண்ணீர் குழாய்களில் அதிகமான உடைப்புகள் இருக்கிறது,
இதனால் வீடுகளுக்கு வழங்கப்படும் தண்ணீர் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது,
இதனால் பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது,
மேலும் குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டார்கள் மூலமாக குடிநீர் எடுப்பதாக பொதுமக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது,
இதுசம்பந்தமாக பேரூராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு பலமுறை நேரில் பொதுமக்கள் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை,
எனவே அனைத்து உடைப்புகளையும் சரிசெய்து தரமான குடிநீர் வழங்கவும்,
மின்மோட்டார்களை காவல்துறை உதவியோடு பறிமுதல் செய்து சீரான குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்குமாறு மக்ஙள் கோரிக்கை வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment