Thursday, 13 December 2018

நெல்லை அருங்காட்சியகத்தில் தூய்மை பணி


என்சிசி மாணவா்கள் முட்செடிகளை அகற்றும் காட்சிAdd caption
நெல்லை. டிச.14-

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் தூய்மை இந்தியா பணி நடைபெற்றது.
     திருநெல்வேலி அருங்காட்சியகம் கட்டிடத்தின் பின்புறம் உள்ள இடத்தில்  செடி கொடிகள் மற்றும் முள் செடிகள்  அடர்ந்து காணப்பட்டது. அருங்காட்சியகம் , திருநெல்வேலி ரோட்டரி கழகம் , என்.சி.சி. மாணவ , மாணவியர்கள் இணைந்து  இதனை சுத்தம் செய்தனர் .
     கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி  என்.சி.சி. மாணவ, மாணவிகள் , பாளையங்கோட்டை  சதக்கதுல்லா அப்பா கல்லூரி என்.சி. சி. மாணவ , மாணவிகள் இந்த பணியை மேற் கொண்டனர்.
     இந்த நிகழ்ச்சியில்  அருங்காட்சியக காப்பாளர் சிவசத்திய வள்ளி , திருநெல்வேலி  ரோட்டரி சங்க தலைவர் பரமசிவன் , செயலாளர் சங்கர நாயகம் , இயக்குனர்கள் செந்தில்குமார் ,அன்டனி பாபு , கமாக் புகழேந்திரன் மற்றும் என்.சி.சி . அலுவலர் வேணுதேவன் , காஜா முகைதீன் , நல்லாசிரியர் செல்லப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment