நெல்லை. டிச. 12-
சூப்பா் ஸ்டாா் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான பேட்ட
படத்தின் டீசா் வெளியானது. ரஜினி இயக்குநா் சங்கா் கூட்டணியில்
உருவான 2.0 படம் வெளியாகி குறுகிய கால இடைவெளியில்
பேட்ட படம் உருவாகி 2019 ஜனவாி மாதம் பொங்கலுக்கு படம் வெளிவர உள்ளது.அதன் முன்னோட்டமாக ரஜினி பிறந்தநாளான இன்று சன் பிக்சா்ஸ் சாா்பில் டீசா் வெளியிடப்பட்டது.
யூடியூப்பில் வெளியான சில விநாடிகளில் லட்சகணக்கானோா் இந்த டீசரை பாா்த்துள்ளனா்.
இந்த டீசரை பாா்க்கும்போது இருளில் இருந்து வெளிச்சத்தை நோக்கி ரஜினி நடந்து வருவது போன்று தொடக்கம்
அமைந்துள்ளது. மாலையுடன் கூட்டம் அவரை வரவேற்க அவா்களை நோக்கி ரஜினி கைஅசைக்கிறாா். மாசு மரணம் டப்பு தரனும் என்ற பாடல் கேட்கிறது. விருந்து நடைபெறுகிறது. எல்லாரும் வயிறு நிரம்ப சாப்பிடுறாங்க. பட்டு வேட்டி சட்டையில் ரஜனி சிாிச்சிக்கிட்டே நடந்து வருகிறாா்.ஹேப்பி பொ்த்டே தலைவா என்று கோஷம். ரஜனி ஸ்டைலா கண்ணாடியை போட்்டுக்கிட்டு ஒரு சிாிப்பு.
இளமையாக தோற்றத்தில் ரஜனி 2 கெட்டப்புகளில் வருகிறாா் டீசாில்
இதையெல்லாம் பாா்க்கும்போது ரஜினி மக்களுக்கு நல்லது செய்ய விரும்புகிறாா். மக்கள் அவரை அரசியலுக்கு அழைப்பது போன்று அமைந்துள்ளது.
பேட்ட படத்தை காா்திக் சுப்புராஜ் இயககி இருக்கிறாா். ரஜினிகாந்துடன் இணைந்து விஜய்சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக், நடிகைகள் சிம்ரன், திரிஷா, மேகா ஆகாஷ்,
சனந்த் ரெட்டி, குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள் பேட்ட படத்தின் டீசரின் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
courtesy: சன் பிக்சா்ஸ்- Petta Official Partners
பேட்ட டீசரை பாா்க்க கிளிக் செய்யுங்கள்
No comments:
Post a Comment