*நெல்லையில் ரூ.150 கோடியில் கட்டப்பட்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை: பிரதமர் மோடி திறக்கிறார்*
நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரூ.150 கோடியில் மத்திய அரசின் நிதியுதவியுடன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இதில் 7 மாடிக் கட்டிடம் ஒன்றும், 5 அடுக்கு கட்டிடம் ஒன்றும் மற்றும் 3 அடுக்கு கட்டிடங்கள் இரண்டும் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன. மேலும் வாகனங்களை நிறுத்த தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது. நான்கு வழிச்சாலையின் மிக அருகே இருப்பதால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் இருந்து வரும் நோயாளிகளும் மாநகருக்குள் நுழையாமல் போக்குவரத்து நெரிசலின்றி மருத்துவமனைக்குள் வர முடியும். சுமார் 19,500 சதுர அடி பரப்பளவில் ரூ.79 கோடியே 63 லட்சத்து 74 ஆயிரத்து 335 மதிப்பில் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரூ.70 கோடியில் அறுவை சிகிச்சை கருவிகள், அதிநவீன மருத்துவ உபகரணங்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பல்வேறு அதிநவீன சிறப்பு மருத்துவத்திற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக நரம்பியல், இதயவியல், நெப்ராலஜி, யூராலாஜி, பிளாஸ்டிக் சர்ஜரி, மெடிக்கல் கேஸ்ட்ரோ ஆகிய துறைகளில் முழு வசதிகளும் கிடைக்க உள்ளது. பைபாஸ் சர்ஜரி, திறந்த இதய அறுவை சிகிச்சை, சிறுநீரக நோய்கள் தொடர்பான அறுவை சிசிச்சை வசதிகள், குடல், கல்லீரல் நோய்கள் தொடர்பான சிகிச்சைகள், தலைக்காயம் மற்றும் மூளை நரம்பியல் தொடர்பான சிகிச்சை வசதிகளும் கிடைக்கும். இந்த சிகிச்சை வசதிகளுக்காக தென்மாவட்டத்தினர் இதுவரை திருவனந்தபுரம் மற்றும் சென்னைக்கு செல்ல வேண்டியிருந்தது. கட்டிடப் பணிகள் நிறைவுபெற்றதோடு அறுவை சிகிச்சை அரங்குகளும் தயாராகி விட்டதால், இது எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் தென்மாவட்ட மக்கள் இருந்து வருகின்றனர். இந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது....

No comments:
Post a Comment