பேராயர் அறிவர் கால்டுவெல் நினைவேந்தல் கருத்தரங்கம் பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்றது. மொழிவளர்ச்சி சமூக விடுதலை சமயப்பணிகள் குறித்து கருத்துரை வழங்கினர். விழாவிற்கு அவ்வை நுண்கலை கல்லூரி தாளாளர் ஓவியர் சந்துரு தலைமை தாங்கினார். டிடிடிஏ தொடர்புத்துறை இயக்குநர் கிப்சன் ஜான்தாஸ் வரவேற்றார்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் பாஸ்கர், பதிவாளர் ஜான் டி பிரிட்டோ, சாமி தோப்பு அய்யாவழி தவத்திரு பாலபிரஜாபதி அடிகளார், பாளை கத்தோலிக்க மறை மாவட்ட முதன்மை குரு சேவியர் டெரன்ஸ், டிடிடிஏ திருமண்டலம் உபதலைவர் பில்லி, திருமண்டல செயலர் ஸ்டீபன் செல்வின் ராஜ், பாராளுமன்ற மேலவை உறுப்பினர் விஜிலா சத்யானந்த்,
இந்திய தொல்லியல் துறை ஆணையர் அறவாழி, எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, பேராசிரியர் எம்எஸ் தங்கம், தூயயோவன் கல்லூரி முதல்வர் ஜான் கென்னடி வேதநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் முன்னதாக குத்துவிளக்கு ஏற்றப்பட்டது. கார்டுவெல் மார்பளவு சிலை, டாக்டர் கால்டுவெல் வாழ்வும் பணியும் என்ற நூல் வெளியிடப்பட்டது. பள்ளி கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் வீடியோ காட்சிகளை உங்களுக்காக பதிவிடுகிறோம். நெல்லை நியூஸ் போஸ்ட் யூ டியூப் சேனலில்.............
my whats app number: 9444345132
To Promote your own Videos Contact : malarvimalesh@gmail.com
இணைந்திருங்கள் nellai newspost உடன் subscribe செய்ய மறந்துவிடாதீா்கள்