மதுக்கடை திறப்பை கண்டித்து மமக கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்
நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வந்த மதுக்கடைகளை மூடிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதன் பின்னணியில் நெல்லை மாவட்டத்தில் மூடப்பட்ட பல மதுபான கடைகள் வழிபாட்டு தலங்கள்,கல்விநிலையங்கள் மற்றும் போக்குவரத்திற்கு ஆகியவற்றிற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் புதிதாக அமைக்கப்படுகின்றன.
அந்த வரிசையில் தாழையூத்து அருகில்,ஏ.எப் குவாரி குடியிருப்பு அருகில் மதுபானகடை
அமைக்க மாவட்ட நிர்வாகம் உத்தேசித்துள்ள டாஸ்மாக் கடை அருகிலுள்ள குடியிருப்பு மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளதோடு அதன் அருகாமையில் அமைந்துள்ளது.பள்ளியின் மாணவ மாணவியருக்கு பெரும் சோதனையாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டும் மக்களின் உணர்வுகளுக்கு எவ்வித மதிப்பும் அளிக்காமல் அரசு தனது வருமானம் மற்றும் மதுபான கூடம் நடத்தும் தனிநபரின் வருமானத்தை பற்றிய அக்கறையுடன் மதுபான கடையை திறக்க முற்படும் செயலை கண்டிக்குமுகமாக மமக மானூர் ஒன்றிய செயலாளர் சாகுல் ஹமீது தலைமையில் ஆர்ப்பாட்டம் தாழையூத்து மின்வாரிய அலுவலகம் அருகே நடைபெற்றது.
கிளை செயலாளர் சாகுல் அமீது வரவேற்றார்.மாவட்ட பொறுப்புகுழு உறுப்பினர் டவுண் ஜமால் மற்றும் பேட்டை சேக் ஆர்பாட்டத்தை துவக்கி வைத்தனர்.கோரிக்கைகளை வலியுறுத்தி மமக மாவட்ட பொறுப்புகுழு தலைவர் உஸ்மான் கான் சிறப்புரை ஆற்றினார்.மாவட்ட அணி நிர்வாகிகள் பாளை செய்யது அலி, அபுபக்கர் அல்தாபி. டவுண் ரசூல், கம்புகடை சுல்தான் டவுண் ஜாபர். ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொண்ட பெண்கள் கோரிக்கை குறித்து கோசங்களை எழுப்பினர்.இறுதியாக தமுமுக கிளை செயலாளர் மன்சூர் நன்றி கூறினார்


No comments:
Post a Comment