Friday, 11 August 2017

நெல்லையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்.





நீட் தேர்வு முறையில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி நெல்லையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்.

     கிராமப்புற ஏழை மாணவர்களை பாதிக்கும் மருத்துவ கல்வி படிப்பில் நீ;ட் தேர்வு முறையில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாளை ஜவஹர் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் நாஞ்சை ரவி தேவேந்திரன் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட தலைவர் பொட்டல் கண்ணன், மகளிரணி செயலாளர் ராதிகா மதன், மாவட்ட தலைவர் மஞ்சுளா முன்னிலை வகித்தனர். கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் சண்முக சுதாகர் தென்மண்டல செயலாளர் அழகர் சாமி கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். மாவட்ட இணை செயலாளர் சிவக்குமார் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment