Wednesday, 2 August 2017

நெல்லை மேற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம்

     நெல்லை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்  மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன் தலைமையில் நடந்தது. மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் வல்லம் செல்லத்துரை கொட்டாகுளம் கோமதிநாயகம் மாவட்ட பொருளாளர் வடகரை கனல் காஜா சுப்பிரமணியன் திருமலைச்சாமி டைட்டஸ் ஆதித்தன் வாசு முத்துச்சாமி பரமகுரு ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்
     மாவட்ட அமைப்பாளர் கோ. சுப்பையா வரவேற்றார் அணி தலைவர் சுப்பையா பாண்டியன் தொகுத்து வழங்கினார். நிசழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரசாக் அவைத் தலைவர் முத்துப்பாண்டி நகர செயலாளர் சாதீர் ஊத்து மலை இளையராஜா சுப்பிரமணிய பாண்டியன் குற்றாலம் மந்திரம் சாமிதுரை காதர் அண்ணாவி யோவான் மாவட்ட பிரதிநிதிகள் பேச்சிமுத்து, சங்கர் ராமராஜ் வடகரை ராமர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர் முடிவில் மாவட்ட துணை அமைப்பாளர் ஆயிரப் பேரிமுத்துவேல் நன்றி கூறினார்
    கூட்டத்தில் அதிமுக ஆட்சியில்  பல்வேறு ஊழல்களை சட்டமன்றத்தில் பேசி  மக்கள் மன்றத்திற்கு எடுத்துக் காட்டிய திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி.

        பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பாவேந்தர் பாரதிதான் பாடல் கவிதை ஒப்புவித்தல் போட்டியை வருகிற 13.08 2017 ஞாயிற்றுக்கிழமை மேலகரம் சமுதாய நலக்கூடத்தில் வைத்து நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
       குற்றாலத்தில் அமைந்துள்ள பூங்காவில் வரலாற்று சிறப்பு மிகு ஓவியங்கள்  திமுக தலைவா்  கலைஞர் ஆட்சி காலத்தில் வரையப்பட்டிருந்தது சீசனுக்கு வரும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் கண்டு களித்து வந்தனர் ஆனால் தற்போதைய எடப்பாடி அரசு அதனை அழித்து விட்டனர் இதனை இக் கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
     தமிழகத்தில் நிலவும் வரலாறு காணாத வறட்சியின் காரணமாக விவசாய பெருங்குடி மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆழாகி தனது வாழ்வாதாரங்களை இழந்து தவித்து கொண்டிருக்கும் நிலை யில் மத்திய மாநில அரசுகள் விவசாயிகளை வஞ்சிப்பதோடு விவசாயிகளின் நிலயை கண்டு கொள்ளாததை  இக் கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது
       வருகிற 10 மற்றும் 11ம் தேதியில் சென்னைய்ல நடைபெறுகிற முரசொலி பவள விழா நிகழ்ச்சிக்கு இலக்கிய அணி சார்பில் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்ய பட்டது

No comments:

Post a Comment