நெல்லை. ஜன. 30-
திருநெல்வேலி டவுன் நெல்லையப்பர் கோவிலை சுற்றியுள்ள கடைகளை உடனடியாக அகற்ற மாநகராட்சியின் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் A.M.விக்கிரமராஜா, துணைத்தலைவர் T.P.V.வைகுண்டராஜா, பொருளாளர் M.சதக்கப்துல்லா, திருநெல்வேலி மாநகர தலைவர் M.R.குணசேகரன், நெல்லை மத்திய மண்டல செயலாளர் விநாயகம் ஆகியோர் தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் S.ராமசந்திரன் சந்தித்து மனு அளித்தனர்.
பேரமைப்பின் கோரிக்கையை உடனடியாக ஏற்ற அமைச்சர் வணிகர்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும் என உறுதியளித்தார். மேலும் மாற்று இடம் வழங்கப்படும் வரை வணிகர்கள் தங்கள் கடைகளில் வணிகம் செய்துகொள்ளவும் அனுமதி அளித்துள்ளார்.