ஆலங்குளம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு பணிச்சுமை மற்றும் மனரீதியாக பாதிக்கபடாத வண்ணம் காவல் நிலையம் அருகிலேயே அவர்கள் விளையாடுவதற்காக இறகுப்பந்து மைதானம் திறப்பு விழா நடைபெற்றது.இந்த விழாவிற்கு ஆலங்குளம் காவல் ஆய்வாளர் ஐயப்பன் தலைமை தாங்கி மைதானத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
உதவி காவல் ஆய்வாளர் விஜய் சண்முகநாதன் முன்னிலை வைத்தார்.விஜய் டிவி புகழ் திருநங்கை 'இப்படிக்கு ரோஸ்' சிறப்பு விருந்தினராக பங்கேற்று விழாவினை சிறப்பித்தார். மேலும் காவலர்களுக்கான உடற்பயிற்சி கூடத்தை உதவி காவல் ஆய்வாளர் விஜய் சண்முகநாதன் திறந்து வைத்தார்.விழாவில் உதவி ஆய்வாளர் சுரேஷ்,சிறப்பு உதவி ஆய்வாளர் மாரியப்பன், எழுத்தர்கள் ஜான்சன்,ஜெயபால் காவலர்கள் கிருஷ்ணகுமார், ஆனந்த், சூர்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



No comments:
Post a Comment