Wednesday, 3 October 2018

நெல்லை ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு எஸ்டிபிஐ போராட்டம்

நெல்லை
நெல்லை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு எஸ்டிபிஐ கட்சியினா்  திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகா் சதுாா்த்தி ஊா்வலத்தின் போது இருதரப்பினா் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடா்பாக செங்கோட்டை போலீசாா் இருதரப்பினா் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனா். இந்த நிலையில் செங்கோட்டை பிரச்னை தொடா்பாக கைது செய்யப்பட்டுள்ள குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள எஸ்டிபிஐ கட்சியினா்  மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்கையும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோாிக்கையை வலியுறுத்தி மாநில செயலாளா் அகமது நவ்வி தலைமையில் நெல்லை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு எஸ்டிபிஐ க்ட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். 

No comments:

Post a Comment