Sunday, 25 February 2018

நெல்லை காந்திநகர் லிட்டில் பிளவர் பள்ளியில் ; கனவு மெய்படவேண்டும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி



நெல்லை காந்திநகா் லிட்டில் பிளவா் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற விழாவின்போது எடுத்தபடம்.
நெல்லை, பிப். 24-
நெல்லை காந்திநகர் லிட்டில் பிளவர் பப்ளிக் பள்ளியில் கனவு மெய்பட வேண்டும் என்ற தலைப்பில் பெற்றோர்கள், பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தாளாளர் அண்டோ ஜோ செல்வக்குமார் தலைமை தாங்கினார். உளவியல் பேச்சாளர் டாக்டர் காயத்ரி, ஊக்கப்பேச்சாளர் பாரதி கிருஷ்ணகுமார் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பெற்றோர்கள், மாணவர்களுக்கு பயனுள்ள பல்வேறு கருத்துகளை பகிர்ந்தனர். சிறப்பு விருந்தினர்கள் பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் சார்பில் கவுரவிக்கப்பட்டனர். விழாவில் டாக்டர் மலர்விழி, ஜோஸ்வின் விமலா, தீபாசெல்வக்குமார், புதிய தலைமுறை தொலைக்காட்சி மேலாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை லிட்டில் பிளவர் பப்ளிக் பள்ளி மற்றும் புதிய தலைமுறை தொலைக்காட்சியினர் செய்திருந்தனர்.



Thursday, 15 February 2018

பிஎஸ்என் இன்ஜினிரிங் கல்லூரியில் தேசிய அளவிலான விளையாட்டு போட்டி

நெல்லை, பிப். 16-
    நெல்லை மேலதிடியூர் பிஎஸ்என் இன்ஜினிரிங் தொழில்நுட்ப  கல்லூரியில் தேசிய அளவிலான விளையாட்டு போட்டி தொடக்க விழா கோலாகலமாக நடைபெற்றது. கல்லூரி தலைவர் சுயம்பு தலைமை தாங்கினார். துணை தலைவர் ருக்மணி சுயம்பு முன்னிலை வகித்தார்.
    காவல்துறை கண்காணிப்பாளர் அருண் சக்திக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு  புறாக்களை பறக்க விட்டு விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.
பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் பாஸ்கர் வாழ்த்தி பேசினார். கல்லூரி துணை தலைவர்கள் ஜெகநாத், ஜெயராம், ராஜா, ஜெயலட்சுமி ராஜா, நிர்வாக இயக்குநர் தம்பிதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர். 3 நாட்கள் நடைபெறும் போட்டிகளில் ஆண், பெண் பிரிவினருக்கான கைப்பந்து, கூடைப்பந்து, ஹாக்கி உள்ளிட்ட போட்டிகள் தனித்தனியாக நடைபெறுகிறது. 

Sunday, 11 February 2018

ஏகேஒய் பாலிடெக்னிக் கல்லூரி முப்பெரும் விழா,

நெல்லை ஏகேஒய் பாலிடெக்னிக் கல்லூரியில் 3ம் ஆண்டு விழா, விளையாட்டு விழா, பணி நியமன ஆணை வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி நிறுவனர் மற்றும் தலைவர் செய்யது அப்துல் காதர் தலைமை தாங்கினார். மாவட்ட  காவல்துறை கண்காணிப்பாளர் அருண் சக்தி குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, பணிநியமன ஆணை, விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டி பேசினார்.
    சுதர்சன் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் சிவராம கிருஷ்ணன், ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி நிர்வாக அறங்காவலர் அமுதவாணன்,
    துபாய் எஸ்என்ஜி குழும நிறுவனங்களின் பொதுமேலாளர் எஸ்எஸ் மீரான், மேலப்பாளையம் அல்மதீனா பப்ளிக் ஸ்கூல் தலைவர் செய்யது அகமது கபீர், ரோட்டரி தலைவர் ஆறுமுக பாண்டியன்,
    அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரி தலைவர் செய்யது அகமது, லிட்டில் பிளவர் கல்வி நிறுவனங்களின் தலைவர் மரிய சூசை, ஆப்பிள் ஹெல்த்கேர் தலைமை நிர்வாக அலுவலர் சரவணன்,
    முஸ்லிம் கல்வி கமிட்டி பொருளாளர் அப்துல் மஜீத் தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி தொழிலாளர் சங்கம் மாநில பொதுச்செயலாளர் முத்துப்பாண்டியன்,
    மின்னல் அறக்கட்டளை நிறுவனர் மில்லத்; இஸ்மாயில் உள்பட பலர் கலந்து கொண்டனர். விஜய் டிவி கலக்கப்போவது யாரு ஆனஸ்ட் ராஜ் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.