Saturday, 10 June 2017

நெல்லை மாவட்ட முக்கிய செய்திகள்

*திருநெல்வேலி மாவட்ட செய்திகள்*


*📮மாநகராட்சிப் பள்ளிகளில் கொசு ஒழிப்புப் பணி*

திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட அனைத்துப் பள்ளிகளிலும் கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெறுவதாக மாநகர நல அலுவலர் மருத்துவர் பொற்செல்வன் தெரிவித்தார்.


*📮மின் வாரியப் பணியாளர்களுக்கு புதிய ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தல்*

மின் வாரியப் பணியாளர்களுக்கு 1.12.2015 முதல் வழங்க வேண்டிய புதிய ஊதிய உயர்வை தாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும்


*📮சுவர் இடிந்து விழுந்து குழந்தை பலி*

முக்கூடல் அருகேயுள்ள உடையாம்புளியில் சுவர் இடிந்து விழுந்து ஒரு வயது குழந்தை சனிக்கிழமை இறந்தது.


*📮சைனிக் பள்ளிகளில் சேருவதற்கான இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்*

இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சைனிக் பள்ளிகளில் சேருவதற்கான இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


*📮ஆலங்குளம் அருகே குளத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் உள்ள காற்றாலையை அகற்றாவிட்டால் உண்ணாவிரதம்: பூங்கோதை எம்எல்ஏ*

ஆலங்குளம் அருகேயுள்ள நாரணபுரம் கிராமத்தில் உள்ள பெரியகுளத்தில் தனியாருக்குச் சொந்தமான காற்றாலையை அகற்றாவிட்டால் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக பூங்கோதை எம்எல்ஏ அறிவித்துள்ளார்.


*📮சங்கரன்கோவில் திரெளபதியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா*

சங்கரன்கோவில் திரெளபதியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்


*📮நலிவடைந்த 370 கோயில்களுக்கு பூஜை உபகரணங்கள் அளிப்பு*

திருநெல்வேலி மாவட்டத்தில் நலிவடைந்த நிலையில் உள்ள 370 கோயில்களுக்கு பூஜை உபகரணங்கள் சனிக்கிழமை அளிக்கப்பட்டன.


*📮புளியங்குடியில் விவசாயி தற்கொலை*

புளியங்குடியில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.


*📮தென்காசியில் "குறளோவியம்' கருத்தரங்கம்*

தென்காசி திருவள்ளுவர் கழக 90ஆவது திருக்குறள் விழாவில், சனிக்கிழமை "குறளோவியம்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.


*📮நெல்லை: 11 மையங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வு: 52% பேர் வரவில்லை*

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-3, 4 பதவிகளுக்கான போட்டித் தேர்வு திருநெல்வேலி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 52.19 சதவீதம் பேர் தேர்வு எழுத வரவில்லை.

No comments:

Post a Comment