 |
| நெல்லை காவல் துறை துணை தலைவா் கபில் சராட்கா் |
நெல்லையில் காவல் துறை துணை தலைவராக கபில் சராட்கர் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறுகையில்; நெல்லை கன்னியாகுமரி தூத்துக்குடி மாவட்டங்களில் ஜாதி மதம் தொடர்பான மோதல் சம்பங்கள் கடந்த 20 ஆண்டுகளாக கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலை தொடர நடடிவக்கை மேற்கொள்ளப்படும்.
சாலை விபத்துக்களை தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு, குற்றச்சம்பவங்களை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சைபர் கிரைம் குற்றங்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
No comments:
Post a Comment