Wednesday, 27 February 2019

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு நெல்லை மேற்கு மாவட்ட புதிய நிா்வாகிகள் தோ்வு ஆலங்குளத்தில் மாநில தலைவா் விக்கிரமராஜா பேட்டி

     





ஆலங்குளத்தில் நடைபெற்ற தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின்
விழா புகைப்படங்கள்  
  ஆலங்குளம்- பிப்- 27-
     தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நெல்லை மேற்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் அறிமுக விழா ஆலங்குளத்தில் நடைபெற்றது.ஆலங்குளம் டிபிவி திரையரங்கு திடலில் வைத்து நடைபெற்ற இந்த விழாவிற்கு நெல்லை மண்டல தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
தென்காசி வியாபாரிகள் சங்க தலைவர் இஸ்மாயில்,பாவூர்சத்திரம் தொழிலதிபர் பால்ராஜ், நெல்லை மாவட்ட அரிசி ஆளை அதிபர்கர்கள் சங்க தலைவர் அன்பழகன்,ஆலங்குளம் நகர வியாபாரிகள் சங்க செயலாளர் உதயராஜ், குற்றாலம் வியாபாரிகள் சங்கத் தலைவர் பாண்டியன்,ஆலங்குளம் முன்னாள் அரிசி ஆலை உரிமையாளர் சங்க தலைவர்  ராமசாமி, ஆலங்குளம் அரிசி ஆலை உரிமையாளர் சங்க துணைத்தலைவர் சண்முகவேல், கல்லிடை வியாபாரிகள் சங்க தலைவர் வேம்பு,வடகரை வியாபாரிகள் சங்க தலைவர் ஷேக்ஒலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத் தலைவர் வைகுண்டராஜா அனைவரையும் வரவேற்று பேசினார்.ஆலங்குளம் நகர வியாபாரிகள் சங்க மூத்த தலைவர் விஷ்ணு நாடார்,செங்கோட்டை வியாபாரி சங்க தலைவர் ரஹீம், பாவூர்சத்திரம் தொழிலதிபர்  தங்கராஜ், ரெட்டியார்பட்டி வியாபார சங்க தலைவர் செல்வராஜ்,பாவூர்சத்திரம் வணிகர்கள் சங்க தலைவர் லோட்டஸ் முருகன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்தனர்.
      தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொது செயலாளர் கோவிந்தராஜூலு, மாநில பொருளாளர் சதக்கத்துல்லா, மாநில கூடுதல் செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா விழாப் பேருரையாற்றினார்.
   நெல்லை மேற்கு மாவட்ட தலைவராக டிபிவி வைகுண்டராஜா, செயலாளராக கணேசன், பொருளாளராக கலைவாணன் செயற்குழு உறுப்பினா்கள் கணேசன், காிகால் மன்னவன் செய்திதொடா்பாளராக இமானுவேல்,  ஆகியோரை அறிமுகப்படுத்தி வைத்தாா். .
      தீா்மானங்கள்   பொதுமக்களும் வணிகர்களும் எளிமையாக செலுத்தும் வகையில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு 5 முதல் 10 சதவீதத்துக்குள் இருக்கவேண்டும்,கேரளாவில் இருந்து இரும்பு போன்ற பொருள்களை முறையாக ஜிஎஸ்டி வரி 18 சதவீதம் கட்டி கொண்டு வரும் வணிகர்களின் வாகனங்களை தமிழகத்திற்குள் அனுமதிக்க வேண்டும்
உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
விக்கிரமராஜா பேட்டி 
    மாநில தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் பேசிய போது,..
தமிழகத்தில் உள்ள காவல்துறையினர் வணிகர்கள் இரவு நேரங்களில் கடை திறந்துவைக்கக்கூடாது என்று அனுமதி மறுக்கின்றனர்.கடைகளை திறக்கக்கூடாது என்று சட்டம் போடுவதை நாம் ஏற்றுகொள்ள இயலாது.
     ஆகவே இதனை சரி செய்ய வணிகர் சங்க பேரவை சார்பாக  நீதிமன்றத்தை நாடியிருக்கிறோம். அதிவிரைவில் 24 மணி நேரமும் கடையினை திறக்கலாம் என்ற நல்ல செய்தியை இந்த பேரவை வாங்கித்தரும் என்பதை உறுதியுடன் கூறுகிறேன் என்று கூறினார்.         அதேபோன்று வணிகர்களை மிரட்டி பணம் பறிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறினார். மேலும் வருகின்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், மத்திய மாநில அரசுகள் தமிழ்நாடு வணிகர்களின் பேரமைப்பின் கோரிக்கைகளை பல ஆண்டு காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
     வணிகர்களின் கஷ்டங்களை புரிந்து கொள்ளாமல் சட்டங்களை மட்டுமே போட்டு வருகின்றனர். எனவே வணிகர் சங்க பேரமைப்பின் கோரிக்கைகளை ஏற்று எந்த கட்சி தீர்மானம் நிறைவேற்றுகிறதோ அந்த கட்சிக்கு பேரமைப்பு வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் ஆதரவு தெரிவிக்க உள்ளதாக கூறினார்.
     விழாவில் தூத்துக்குடி மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், நெல்லை மத்திய மாவட்ட தலைவர் முருகேசன்,நெல்லை மாநகர தலைவர் குணசேகரன், மாநில இணைச்செயலாளர் நயன்சிங்,  நெல்லை தெற்கு மாவட்ட தலைவர் சின்னத்துரை,நெல்லை வடக்கு மாவட்ட தலைவர்
முத்தையா, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் காமராஜ்,வடக்கு மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் மற்றும் மாநில மண்டல மாவட்ட நிர்வாகிகள் அனைத்து சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் விநாயகம் நன்றி கூறினார்..