Tuesday, 18 September 2018

பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை

சென்னை புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை நடத்தியது அம்பலமானதை தொடர்ந்து நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.


நெல்லை 
     சென்னை புழல் மத்திய சிறையில் கைதிகளின் சொகுசு வாழ்க்கை பற்றிய புகைப்படங்கள் அண்மையில் வெளியானது. இந்த புகைப்படங்களின் மூலம் கைதிகள் சொகுசாக இருப்பது தெரியவந்தது.கைதிகள் தாங்கள் அடைக்கப்பட்ட அறைகளை உல்லாச விடுதிகளாக மாற்றி இருப்பதை அந்த புகைப்படங்கள் வெளிச்சம் போட்டு காட்டின. கைதிகள் ‘டிப்-டாப்’ உடை அணிந்து சிறைச்சாலைக் குள் வலம்வந்த காட்சிகள் இடம்பெற்று இருந்தது.கைதிகள் அடைக்கப்பட்டு இருந்த அறைகளின் ஜன்னல்களில் வண்ண திரைச்சீலைகள் தொங்க விடப்பட்டு இருந்தன.வெளியில் இருந்து கொண்டு வரப்பட்ட சுவையான உணவு வகைகளும் கைதிகளுக்கு பரிமாறப்பட்டதற்கான புகைப்படங்களும் வெளியாயின.
இந்த புகைப்படங்களை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. அசுதோஸ் சுக்லா தலைமையில் மத்திய சிறைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது  
     இதன் தொடர்ச்சியாக இன்று அதிகாலையில்  நெல்லை மாவட்டம்
பாளையங்கோட்டை மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என 850-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர். இங்குள்ள கைதிகளிடம் சமீபகாலமாக கஞ்சா, செல்போன்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் சிறைத்துறை அதிகாரிகள் அவ்வப்போது பறிமுதல் செய்து வருகின்றனர். சில நேரத்தில் வெளியில் இருந்து கஞ்சா பொட்டலங்களை சிலர் சிறை வளாகத்திற்குள் வீசிய சம்பவமும் நடந்தது.
       பாளையங்கோட்டை உதவி ஆணையர் விஜயகுமார் தலைமையில் அதிரடி சோதனை.   
இன்ஸ்பெக்டர்கள் முத்துராமலிங்கம் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட மொத்தம் 50 போலீசார் காலை 6 மணிக்கு சிறைக்குள் திடீரென்று நுழைந்தனர். அவர்கள் 4 பிரிவுகளாக பிரிந்து சிறையில் கைதிகள் தங்கியிருந்த ஒவ்வொரு அறையிலும் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் கைதிகளின் குளியல் அறைகள், சமையல் அறைகளிலும் சோதனை நடத்தப்பட்டது.,,சோதனையின் போது சிறையில் இருந்த வார்டர்கள், அதிகாரிகள் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. 
          மேலும், சிறை வாசலில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த சோதனையில் சில கைதிகளிடம் இருந்து பீடி கட்டுகள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டதாகவும், வேறு எந்த பொருட்களும் சிக்கவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். இதுதவிர, சிறை வளாகத்தில் ஏதாவது செல்போன்கள், கஞ்சா பொட்டலங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை காலை 6மணி முதல் சுமார் 2 மணி நேரம் நீடித்தது. இதனால் சிறை வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது

நெல்லையில் திமுக கண்டன ஆா்ப்பாட்டம்- அதிமுக அரசை கண்டித்து