| ஆண்டிப்பட்டி துாய அடைக்கல அன்னை தேவாலயம் திருவிழா கொடியேற்றம் கோலாகலமாக நடைபெற்றது. படங்கள் விமல் - விமலேஷ் |
ஆண்டிப்பட்டியில் தூய அடைக்கல அன்னை தேவாலயம் கொடியேற்றம்
கோலாகலமாக நடைபெற்றது.
ஆலங்குளம் அடுத்த ஆண்டிப்பட்டி தூய அடைக்கல அன்னை தேவாலயம் கி.பி. 1630ல் தமிழறிஞர் வீரமாமுனிவரால் கட்டப்பட்டது. மிகவும் பழைமை வாய்ந்த இந்த தேவாலயத்தில் 2016 ஜனவரி மாதம் 30 ம் தேதி மாதா சொரூபத்தின் அடியில் எண்ணெய் ஊற்றாக வெளிவந்து அதிசயம் நடைபெற்றது. அதிசய எண்ணெய் தந்த தூய அடைக்கல அன்னைக்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாத இறுதியில் விழா நடைபெறுகிறது.
இந்த ஆண்டு 10 நாள் திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன்
கோலாகலமாக தொடங்கியது. கோவில்பட்டி பங்குத்தந்தை அருட்திரு மைக்கேல்ராஜ், வெய்காலிபட்டி பங்குத்தந்தை அருட்திரு
லியோ ஜெரால்ட் ஆகியோா் கொடியேற்றி வைத்தனா்.
இறைமக்கள் கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
முன்னதாக பீடத்தில் கொடி அர்ச்சிக்கப்பட்டு பவனியாக கொண்டு
வரப்பட்டது. வருகின்ற செப்டம்பர் 7ம் தேதி வெள்ளிக்கிழமை புதுநன்மை, ஞானஸ்நானம் இரவு தேர்பவனியும், மறுநாள் அதிகாலை தேரடி திருப்பலியும், இரவு நன்றி திருப்பலி கொடியிறக்கம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஆலங்குளம் பங்குத்தந்தை அந்தோணி ராஜ் அடிகளார், அருட்சகோதரிகள் ஆண்டிப்பட்டி, இறைமக்கள் செய்துள்ளனர்.