Monday, 11 December 2017

சோனியா காந்தி பிறந்தநாள். ஆலங்குளத்தில் நலத்திட்ட உதவிகள்


ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தபோது எடுத்த படம் 
       சோனியா காந்தி பிறந்தநாள் விழாவையொட்டி நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள்  வழங்கப்பட்டது.
    சோனியா காந்தி பிறந்தநாள் விழா நெல்லை அடுத்த ஆலங்குளத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் எஸ்.கே.எம் சிவக்குமார் தலைமை தாங்கினார். எம்.எஸ். காமராஜ் முன்னிலை வகித்தார். ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அரசு மருத்துவமனையில் பிறந்த 4 குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அணிவிக்கப்பட்டது. நோயாளிகளுக்கு பிஸ்கட் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் பால்ராஜ், ஆலடி சங்கரய்யா, தங்கசெல்வம், பிரகாஷ், மணிகண்டன் வி.பி. செல்லையா, எம்.எஸ் அருணாச்சலம், ராஜா, ரூபன், இளங்கவி, இளபெருமாள், சுரேஷ், டேவிட் பால்ராஜ், தருவை காமராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.